யாழில் 22 குடும்பங்கள் பாவித்த வீதியை காணவில்லை: காவல்துறை துணையுடன் காட்டுமிராண்டிகள் அட்டகாசம்

 

breaking







50 வருடங்களுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டிலிருந்த பாதையை தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் மூடிய நிலையில் குறித்த வீதியை நம்பியிருக்கும் 22 குடும்பங்கள் பாதை இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். 


குறித்த சம்பவம் சண்டிலிப்பாய் ஜே .143 கிராம  சேவகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவில் புனரமைப்பு செய்யப்பட்ட குறித்த வீதியின்  புனரமைப்பு பணிகள் இடைநடுவில்  அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வீதியை போக்குவரத்திற்காக 22 குடும்பங்கள் பயன்படுத்தும் நிலையில், ஒரு கூட்டம் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக வீதியை மூடி அடைத்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் அந்தரிக்கின்றனர். 


குறித்த விடயம் தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த தவிசாளர் பொலிஸாருடன் மணிக்கணக்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்  பாதையை தற்காலிகமாகத் திறப்பதற்கு  ஒத்துழைக்குமாறு கூறினர். குறித்த சம்பவத்தில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் குறித்த வீதியை பூட்டுவதற்கும் பொலிஸாரும் உடந்தையா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.