குவைத் மன்னருக்கு கோத்தாபய இரங்கல் தெரிவிப்பு!

 

குவைத் மன்னர் ஷேய்க் சபாவின் மறைவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவு தொடர்பான இரங்கல் பதிவை தனது ருவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார்.

குறித்த இரங்கல் பதிவில் ஜனாதிபதி,

“கெளரவத்துக்குரிய குவைத்தின் மன்னரான ஷேய்க் சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

இந்நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என குறிப்பிட்டுள்ளார்.

Blogger இயக்குவது.