சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து புதிய சட்டம்!

 

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கட்டடங்களை அமைப்பவர்கள் வெறுமனே அபராதத்தை மாத்திரம் செலுத்தி தப்பிப்பதாகவும் இனிமேல் அவ்வாறு தப்பிக்க முடியாதளவுக்கு சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Blogger இயக்குவது.