பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது!

 

மன்னார் – முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய முத்தரிப்புத்துறை மேற்கு கிராம சேவகர் சிலாபத்துறை பொலிஸாரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர், ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் அவர், பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்டப்படுத்த கூடாது என்பதற்காக தான் வீட்டிலேயே கொண்டுவந்து தருவதாக தெரிவித்ததுடன் முத்தம் தருமாறும் கோரியுள்ளார்.

குறித்த விடயத்தை உடனடியாக முசலி பொலிஸாருக்கு குறித்த பெண் கொண்டு சென்றதை தொடர்ந்து, குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Blogger இயக்குவது.