இந்திய கொரோனா கப்பலால் 34 பேர் தனிமைப்படுத்தல்!

 

திருகோணமலையில் நங்கூரமிட்டுள்ள இந்திய கப்பலில் 17 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதால் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்,

“அந்த இந்தியக் கப்பல் திருகோணமலைக்கு செல்லும்முன், கொழும்பு துறைமுகத்திலிருந்த காரணத்தினால் கப்பலிற்குள் சென்றுவந்த 6 ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் சமூகத்தில் பரவாமலிருப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதார நெறிமுறைகளை மக்கள் மறந்தால் மீண்டும் தொற்று நாட்டில் பரவலாம்” – என்றார்.

Blogger இயக்குவது.