போதைப்பொருள் விவகாரம் - பிரபல தமிழ் நடிகை கைது!
கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைபொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நடிகை ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் உள்ள பல நட்சத்திரங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது
மேலும் இது குறித்து ஜெயம் ரவியின் ’நிமிர்ந்து நில்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை ராகினி திவேதியையும் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்தனர். இது குறித்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜரானதாகவும் தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சற்றுமுன் கைது செய்தனர். அவரது வீட்டிற்கே சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ததாகவும், சோதனையைத் தொடர்ந்து ராகினி திவேதி கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
போதை பொருள் விவகாரத்தில் தமிழ் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை