திடீரென பற்றி எரிந்த மின்மாற்றி

 

breakingகொழும்பு - ஆமர் வீதியில் உள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று பிற்பகல் திடீரெ தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று முற்பகல் 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்த தீ விபத்தை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த மின் மாற்றியில் ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.