ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது!


ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 63 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.