பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரேகாவின் முதல் கண்ணீர் பதிவு!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசனிலும் பெண்கள் தான் வெளியேறியுள்ளனர். அந்தவகையில் இந்த 4வது சீசனில் முதல் இரண்டு வராமும் போட்டியாளர்கள் அனைவரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சகஜமாக பழகி அனுசரித்து போனவர் ரேகா.


ஆனால், அப்படி இருந்தால் பிக்பாஸ் வீட்டில் வேலைக்கு ஆகாது. ஏதேனும் சர்ச்சை, சண்டை , அல்லது இளம் ரசிகர்களின் பேவரைட் என ஏதேனும் ஒரு விஷயத்தில் சென்சேஷனல் போட்டியாளராக மக்கள் பார்க்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே இதில் கடைசிவரை நிலை நிற்கமுடியும்.

ஆனால், ரேகா விஷயத்தில் அப்படி எதுவும் இல்லாததால் அவர் நேற்று எவிக்ஷனில் வெளியேறினார். அப்போது வீட்டில் இருந்த போட்டியாளர்களில் அர்ச்சனா , ஷிவானி, பாலாஜி உள்ளிட்டோர் மிகவும் வருத்தப்பட்டு கண்கலங்கி அழுதனர்.

அதில் உண்மையாக மன வருத்தப்பட்டு அழுதது என்னவோ ஷிவானி தான். காரணம் ஷிவானி பிக்பாஸில் நுழைந்த நாள் முதல் எந்த விஷயத்திற்கும் எமோஷனல் ஆகி அழுது நாம் பார்த்ததே கிடையாது. முதன்முறையாக ரேகாவிற்காக அழுததால் அனைவரும் மீம்ஸ் போட்டு வைரல் ஆக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது வீட்டை விட்டு வெளியேறிய ரேகா முதன்முறையாக தனது இன்ஸ்டாவில், பாலாஜி மற்றும் ஷிவானியை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி வருத்தப்பட்டு பதிவிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.