இலங்கைக்கு ஜேர்மனி பாராட்டு

 மரண தண்டனை தொடர்பான தடை குறித்து ஜேர்மனி இலங்கையை பாராட்டியுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட்,

மரண தண்டனை தொடர்பான தடைக்கு இலங்கையை பாராட்ட வேண்டும். இலங்கையில் 1976 ஆம் ஆண்டு முதல் மரண  தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

அண்மைய தசாப்தங்களில் உலகெங்கிலும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை கட்டுப்படுத்தியுள்ளதுடன் இரத்து செய்தும் உள்ளன.

60 க்கும் குறைவான நாடுகளில் மரண தண்டனை அமுலில் உள்ளது. அவற்றில் ஜேர்மனியின் நெருங்கிய பங்காளிகளான ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். 

அமெரிக்காவில், ஜூலை 2020 இல் கூட்டாட்சி மட்டத்தில் மரண தண்டனை 2003 முதல் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில், மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரே நாடு பெலாரஸ் ஆகும்.

கடந்த ஆண்டு சீனாவில் 650 க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளும், ஈரானில் 250 க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மரண தண்டனையை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை ஆதரிப்பது ஜேர்மனிய மனித உரிமைக் கொள்கையின் முன்னுரிமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Blogger இயக்குவது.