பதவியுயர்த்தப்பட்டுள்ள புதிய மேஜர் ஜெனரல்கள்!

 இராணுவ தினமான நேற்று (10.10.2020) கொண்டாடப்பட்டது. இதன்போது மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட இராணுவத்தின் 12 சிரேஷ்ட பிரிகேடியர்களில் 9 பேருக்கு பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையகத்தின் தளபதி அலுவலகத்தில் வைத்து புதிய தரவரிசை சின்னங்கள் அணிவித்தார்.

மேலும், பிரிகேடியர், கேணல், லெப்டினன்ட் கேணல், மேஜர், கெப்டன், லெப்டினன் மற்றும் இரண்டாம் லெப்டினன் உள்ளிட்ட தரங்குளுக்கு 502 அதிகாரிகள் 71 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையில் ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

கடந்த ஆண்டுகளில் இராணுவத்திற்கு ஒரு மதிப்புமிக்க சேவையை வழங்கிய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர்களின் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் தரத்திற்கான, பீக் தொப்பிகள், கேண்கள் மற்றும் வாள்களை வழங்கிய பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அந்த அதிகாரிகள் அனைவருக்கும் நினைவு சின்னங்களை வழங்கினார் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
Blogger இயக்குவது.