கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விடயங்கள்: ஒரே பார்வையில்...!நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது இலங்கையில் 3,457 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம்(20.10.2020) 100 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் மொத்த கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,685 ஆக அதிகரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 2,222 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 297பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

Blogger இயக்குவது.