பூகொடை OIC விளக்கமறியலில்!

 


கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பூகொடை பொலிஸ் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம் திகதி பூகொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்படி, குறித்த இளைஞர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், சுகயீனம் காரணமாக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டனர்

Blogger இயக்குவது.