கொரோனா கட்டுப்பாடுகள் அமைச்சர்களுக்கில்லையா?


 யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட தலைமை காரியாலயத்தினை இன்று (08) திறந்து வைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாமல் ராஜபக்சவுடன், அமைச்சர் ஒருவரும் அவரது தொண்டர்களும் சேர்ந்து சுகாதார கட்டுப்பாடுகள் எதுவுமின்றி குழுப்புகைப்படம் எடுத்திருக்கின்றமையானது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா அதிகளவில் பரவி வரும் நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் முகக்கவசம் அணிந்திருந்த நிலையிலும், அவரோடு புகைப்படம் எடுத்தவர்கள் முகக்கவசமும் அணியாமல், சமூக இடைவெளிகளையும் பேணாமல் இவ்வாறான புகைப்படங்கள் எடுக்கின்றமையானது மக்கள் மத்தியில் கோபத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற கொரோனா நிலைமகளின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்ற நிலையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் பொறுப்பற்று செயற்படுவது மக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.