யாழில் ஓட்டம் காட்டிய நாமல்!

 


இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று (9) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை பார்வையிட்டதுடன், உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்த நாமல் ராஜபக்ச இன்று காலை துரையப்பா விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டதுடன், மைதானத்தை பார்வையிட்டுள்ளார்.

இதன் போது, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.