மொனராகலை சிறை மோதலில் கைதி மரணம்!


 மொனராகலை சிறைச்சாலையில் நேற்று (03) இடம்பெற்ற மோதலில் அம்பாறையை சேர்ந்த கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த கைதி சிறைச்சாலை அதிகாரியை தாக்கியதாகவும் இதன்போது அவரை தடுக்கும் முயற்சியில் நடந்த மோதலில் குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.