மஹர சிறையில் 8 பேர் கொல்லப்பட்டனர்!


 மஹர சிறையில் நேற்று (29) மாலை தொடங்கிய கைதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்புடனான மோதல் தற்போது வரை தொடரும் நிலையில் இதுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு சிறை அதிகாரிகளை பணைய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு கைதிகள் தப்பிக்க முயன்ற போது மோதல் தொடங்கியது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பணைய கைதிகளாக இருந்த அதிகாரிகள் இருவர் மீட்கப்பட்டதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.

கைதிகளால் தலைமை அலுவலகம் மற்றும் சமையலறையில் ஏற்படுத்தப்பட்ட தீப்பரவல் இன்று (30) காலை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சிறைக்குள் அதிரடிப்படை வீரர்கள் 200 பேரும் பொலிஸார் 400 பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். எனினும் இப்போது வரை மோதலை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.