போலிச் செய்திகளை வெளியிடுவோருக்கு பொலிஸ்மா அதிபரின் எச்சரிக்கை!


சமூகவலைத்தளங்களில் போலிச் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் போலி செய்திகள் சமூகவலைத்தலங்களில் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறான செய்திகள் நாட்டுமக்கள் மத்தியில் இன மற்றும் மத பேதங்களை தோற்றுவிப்பவையாக காணப்படுகின்றன.

உயிர்த்தஞாயிறுதின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதுடன்இஜனாதிபதி ஆணைக்குழுவிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கத்தோலிக்க மக்கள் மத்தியிலே நம்பிக்கையை இல்லாமல் செய்யும் நோக்கத்திலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்காக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் செயற்பட்டு வரும் நிறுவனங்களுக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்வைத்து வரும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு 56 இலக்கத்தின் சிவில் மற்றும் அனைத்தின கூட்டுறவு சட்டம் தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆவது சரத்து, 485 சரத்துகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டின் 8 ஆவது இலக்க சட்டத்திற்கமைய சந்தேக நபர்கள் மற்றும் சாட்சாதாரிகள் பாதுகாப்பு சட்டவிதிகளுக்கமையவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரம் தொடர்பில் இணைய மற்றும் கணினி ஊடாகவும் பரிசீலனைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய குற்றப்புலனாய்வு பிலிவினரும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யாசகர் ஒருவரே வீதியில் உயிரிழந்தநிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

எனினும் இவ்வாறு மேலும் பலர் வைரஸ் காரணமாக உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் வீதியோரங்களில் இருந்து மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் 17 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தகைய போலி செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன், இது தொடர்பில் கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.