நடிகர் பிரபுதேவாவிற்கு ரகசியத் திருமணம்!!

 


சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமான பிரபுதேவா தனது திறமையால் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்துத் தற்போது நட்சத்திர அந்தஸ்தில் வலம் வருகிறார். இவருடைய நடனத்திற்கு மட்டுமே உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரபுதேவா தன்னுடைய சென்னை இல்லத்தில் பெற்றோர் சம்மதத்துடன் பீகாரை சேர்ந்த பிசியோரெசி டாக்டர் ஒருவரை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.


பிரவுதேவாவிற்கு ஏற்கனவே ரமலதா என்பவருடன் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் இருக்கின்றனர். அதில் முதல் குழந்தையான 12 வயது சிறுவன் மூளை கோளாறு காரணமாக உயிரிழந்து விட்டார். பின்பு கடந்த 2010 வாக்கில் நடிகை நயன்தாராவை பிரபுதேவா விரும்புகிறார், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் ஊடகங்களில் கசிந்தது. இதை விரும்பாத ரமலதா மகளிர் அமைப்புகளை நாடி தனது தரப்பு நியாயத்தை கோரி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை பிரவுதேவா விவாகரத்து செய்தார்.


9 வருடங்களுக்கு பிறகு தற்போது பிசியோதெரபி டாக்டர் ஒருவரை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இத்திருமணத்திற்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே வந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சல்மான் கானை வைத்து ராதே எனும் இந்தி திரைப்படத்தை இயக்கி வரும் பிரபுதேவா அந்த பணிக்காக மும்பையில் கடந்த சில மாதங்களாக தங்கி வந்தார். அப்போது அவருக்கு முதுகுவலி காரணமாக பிசியோதெரபி மருத்துவரிடம் சென்றதாகவும் அந்நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.


இதைத்தவிர பிரவுதேவாவின் திருமணம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவருக்கு பல திரை நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபுதேவா நடனம் அமைத்த ரவுடி பேபி பாடல் தற்போது 100 கோடி ரசிகர்களை சென்றடைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.