மஹிந்தவை நாமே காப்பாற்றினோம்!


 மஹிந்த ராஜபக்ஷவை தமது ஆட்சியே மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்தரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. யுத்தத்தின் இறுதிக் காலத்தில் சர்வதேச சட்டம் மீறப்பட்டதாகவும், இலங்கைக்குள் விசாரணை நடத்தி அந்த சட்ட மீறல் தொடர்பில் ஆராய்வதாகவும், அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி ,இன்றும் இதுவே எமக்கு சிக்கலாக அமைந்துள்ளது. அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், மஹிந்த ராஜபக்ஷ தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்ன ஆனது? 2015 மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூடினால் எமது நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை காணப்பட்டது. அதனால் தான் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ தேர்தலுக்கு சென்றார். ஆனால் அவர் தோற்றுவிட்டார்.

ஆட்சிக்கு வந்த எமக்கு, சர்வதேச உறவுகளை குறிப்பிடத்தக்க மட்டத்துக்கு கொண்டுவர முடியுமாக இருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல முற்படுவதாக மஹிந்த ராஜபக்க்ஷ கூறியிருந்தார். எனினும், நாம் சர்வதேச விசாரணைக்கு இணங்கியிருந்தால் மஹிந்த ராஜபக்க்ஷ குற்றவாளியாகியிருப்பார்.

எனவே , சர்வதேச விசாரணை தேவையில்லை, உள்நாட்டு பரிசோதனையை மேற்கொள்வோம் என நாம் தெரிவித்தோம். இவ்வாறு தான் அவர்கள் குற்றஞ்சாட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. நாம் தான் மஹிந்தவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.