ஆனமடுவ ஓஐசி மரணம்!


 புத்தளம் – ஆனமடுவ பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பு அதிகாரியும் (ஓஐசி) சப் இன்ஸ்பெக்டருமான அஜித் ஹேமானந்த ரத்நாயக்க (38-வயது) இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார்.

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றை தனது காரில் விரட்டி சென்ற போது, அவரது கார் சறுக்கி சென்று மணிக்கூட்டு கோபுரத்தில் மோதி விபத்து இடம்பெற்றது.

Blogger இயக்குவது.