பெயரில் தான் யாழ்ப்பாணம்; தமிழர்கள் விளையாடவில்லை!


 எல்.பி.எல் 2020 போட்டிகளின் இரண்டாவது போட்டி இன்று(27) நடைபெறுகிறது. இந்த போட்டி யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கும் காலி கிளேடியர்ஸ் அணிக்கும் இடம்பெறுகிறது.

முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிளேடியர்ஸ் அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 175 ஓட்டங்களைப் பெற்றது காலி அணி. இந்த அணி சார்பில் பாக்கிஸ்தானின் சகிட் அப்ரிடி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி தற்போதுவரை இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில், தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்த அணி சார்பில் அவிஸ்க பெர்னாண்டோ அரைச்சதம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இன்றைய போட்டியில் யாழ்ப்பாண அணி சார்பாக ஒரு தமிழ் வீரரைக் கூட ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்ற விசனம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ் இளைஞர்கள் மீம்ஸ்கள், ரைட்டப்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்காக டினோசன், விஜயராஜ், கபில்ராஜ், விஜய்காந்த் என்ற நான்கு தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த விமர்சனங்களை தகர்த்தெறிந்து அடுத்த போட்டியிலாவது தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.