நாடாளுமன்றில் தலைவர் பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!


 “எங்களுடைய இனத்துக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று(26) தெரிவித்தார்.

வரவு செலவுக் கூட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“மகாவலி அபிவிருத்தி நடவடிக்கைகள் இராணுவத்தினருக்கு ஒத்த மாதிரியே இருக்கின்றன. தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வவுனியா, முல்லைத்தீவில் 10 சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. வனவளங்கள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன.

நாங்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்லர். வடக்கு, கிழக்கில் எமது மக்கள் தனித்துவமாக வாழ வேண்டும் என்றே கூறுகிறோம். ஆனாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. 1970 இல் அமைக்கப்பட்ட மகாவலி அமைப்புக் கூட ஆயுதப் போராட்டத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம். இப்படி எல்லாம் நடக்கும் எனத் தெரிந்துதான் தலைவர் பிரபாகரன் மண்ணையும், இனத்தையும் பாதுகாக்க ஆயுதப் போராட்டத்தை தொடக்கியிருக்கலாம்.

தலைவர் இல்லாத இந்தக் காலப்பகுதியில் தான் நிலங்கள் பறிபோகின்றன. எங்களுடைய இனத்துக்காக போராடிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.