மலையிலிருந்து விழுந்து தந்தை உயிரிழப்பு!


 பதுளை தெமோதர எல்லந்தை பகுதியில் உள்ள கருங்கற்கள் உடைக்கும் மலையிலிருந்து தவறி விழுந்து 29 வயதுடைய இருபிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

தெமோதரை எல்லந்தை பகுதியில் 35 வருடங்களுக்கு மேலாக எல்ல பிரதேச சபையினால் பாரிய கருங்கற்கள் மலையை பகுதிகளாக பிரித்து கருங்கற்களை உடைத்து விற்பனை செய்வதற்கு பத்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கியுள்ளது.

அதில் 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் பல வருடங்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆரம்பகாலங்களில் மிக சிறிய கருங்கற்கள் உடைக்கும் மலைத்தொகுதியாக இருந்த பகுதி காலப்போக்கில் மிக பெரிய கருங்கற்கள் உடைக்கும் மலைத்தொடராக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று18.11.2020 மதியம் 12.40 மணியளவில் தெமோதரை எல்லந்தை பகுதியில் உள்ள கருங்கற்கள் உடைக்கும் மலைத்தொடரில் கருங்கற்களை உடைத்து கொண்டிருந்த 29 வயதையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய மொஹமட் ரிபாஸ் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து குறித்து எல்ல பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்குகின்றனர் .

தெமோதரை எல்லந்தை பகுதியில் 35 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் கருங்கற்கள் உடைக்கும் மலைத்தொடர் தொடர்பில் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் பாரிய பிரச்சினைகள் பல காலமாக தோற்றுவிக்கப்பட்டு வந்தது. எனினும் அரசியல் நோக்கங்களுக்காக இந்த மலைத்தொடரிலிருந்து கருங்கற்கள் உடைக்கும் வேலைகள் நிறுத்தப்படவில்லை.

எனினும் வருடத்துக்கு ஒரு உயிர் என்ற கணக்கில் இது வரையில் 13 க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் தெமோதரை எல்லந்த கருங்கற்கள் உடைக்கும் மலைதொடரில் இடம்பெற்றள்ளன. 

எனவே உரிய அதிகாரி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே இன்னுமொரு உயிர் செல்வதுக்கு முன் தடுக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

Blogger இயக்குவது.