தம்புள்ளயை வென்றது யாழ்ப்பாணம்!


 லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (30) தம்புள்ள விகிங்ஸ் – யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன.

இந்தப்போட்டியில் திசார பெரேராவின் அதிரடி மூலம் ஓட்டங்களை வாரிக் குவித்த யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை விளாசியது. ஆரம்ப நிலையில் 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த யாழ்ப்பாணம், திசாரவின் அதிரடியால் 218 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் திசார பெரேரா 44 பந்துகளில் ஆட்டமிழக்காது 7 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்களை பெற்றார். அத்துடன் திசாரவால் 19வது ஓவரில் 30 ஓட்டங்கள் பெறப்பட்டது. இதில் 3 பவுண்டரி, 3 சிக்ஸ்ஸர்கள் அடங்கும். மேலும், அணிசார்பில் சத்துரங்க டி சில்வா 29 ஓட்டங்களை பெற்றிருந்தார்

பந்துவீச்சில் சமித் படேல் 26 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய தம்புள்ள 19.1 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சமித் படேல் 41 ஓட்டங்களையும், டசுன் ஷானக 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உஸ்மான் ஷின்வாரி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதேவேளை யாழ்ப்பாணம் அணிக்கு இரு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒருவருக்கும் இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.