டிப்பரால் ஏற்பட்ட விபத்து!


 வவுனியா – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் – டிப்பர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில் விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றும் ஹொரவ்பொத்தானை – ரிட்டிகஹவெவ பகுதியைச் சேர்ந்த எம்.அனுலா குமாரி (56-வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது டிப்பருடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் சில்லுக்குள் சிக்குண்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்துடன், விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைதாகியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.