யானைகள் மரணம்! 2ம் இடத்தில் இலங்கை


 யானை – மனிதன் மோதல் காரணமாக உலகில் யானைகளின் மரணம் அதிகளவில் இடம்பெறும் நாடாக இலங்கை இரண்டாவது இடத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச கணக்குகள் பற்றிய தெரிவுக்குழுவால் இ்ந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வருடமொன்றுக்கு 272 யானைகள் மரணிக்கின்ற நிலையில், கடந்த வருடம் 407 யானைகள் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 60 ஆண்டு காலமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு 3 வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.