கொரோனா மருந்துக்கு சென்ற பெருமளவானோர் விரட்டப்படர்!


 கேகாலையில் தம்மிக்க பண்டார என்பவரின் ஆயுர் வேத கொரோனா பாணி மருந்தை பெறுவதற்காக அவரது வீட்டிற்கு சென்ற நூற்றுக்கணக்கானோர் இன்று (18) பொலிஸாரால் கலைக்கப்பட்டனர்.

அவரது மருந்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் அவரது வீட்டிற்கு பலரும் படையெடுத்த நிலையில் பொலிஸாரால் அவர்கள் கலைக்கப்பட்டுள்ளனர்.

மருந்து வழங்கப்படும் என கூறப்பட்டதாலேயே அங்கு வந்ததாக குறிப்பிட்ட சிலர் முரண்பாட்டிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறு கூடியோரில் போலியான தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.