விபச்சார விடுதி நடத்திய ரோஸ்மேரி விடுதலை!


 கொள்ளுப்பிட்டி – லைப்ரேடி ப்ளாஷாவில் விபச்சார விடுதி நடத்தி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜீனா மெடம் எனும் ரோஸ்மேரி பெலிசியா பெரேராவை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2010ம் ஆண்டு ஐந்து பெண்களுடன் கைது செய்யப்பட்ட ஜீனா மெடத்திற்கு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 2020 ஒக்டோபர் 19ம் திகதி இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு எதிரான மேன் முறையீட்டை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே தண்டனையில் இருந்து ஜீனா மெடம் விடுலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அவரை விடுதலை செய்து “விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுபவருக்கு எதிராக ஏனைய பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு கொண்டுவர முடியாது” என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.

நீதிபதிகளான புவனேக அலுவிஹார, எல்.ரி.பி தெஹிந்தெனிய மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோரே இந்த தீர்ப்பை வழங்கினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.