தம்புள்ள 28 ஓட்டங்களினால் வென்றது!


 லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (01) தம்புள்ள விகிங்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதியிருந்தன.

இந்தப் போட்டியில் தம்புள்ள அணி 28 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் ஆடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் டசுன் ஷானக (56), சமித் படேல் (30) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் அன்ட்ரு ரசல் (18/3), இசுறு உதான (25/3) விக்கெட்களை கைப்பற்றினர்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய கொழும்பு 18.4 ஓவர்களில் 147 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்களையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் லவுரி இவான்ஸ் (59) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அன்வர் அலி (10/2), மலிந்த புஸ்பகுமார (19/2), சமித் படேல் (30/2), புலின தரங்க (31/2) விக்கெட்களை கைப்பற்றினர்.

Blogger இயக்குவது.