ஏ.ஆர். ரஹ்மானின் அம்மா மரணம்!


 ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார்.இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பேராதரவாக இருந்து வந்தவர் அவரின் அம்மா கரீமா பேகம். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.


கரீமா பேகம் இறந்த செய்தி அறிந்த இசை ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அம்மாவின் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் தான் ரஹ்மானுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்..


ஏ.ஆர். ரஹ்மானுக்கு இசை தான் சரிபட்டு வரும் என்பதை கண்டுபிடித்தவரே கரீமா தான். இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் முன்பு பேட்டி ஒன்றில் கூறியதாவது,

எனக்குள் இருக்கும் இசை திறமையை என் அம்மா தான் கண்டுபிடித்தார். என் தந்தை இறந்த பிறகு அவர் பயன்படுத்திய இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு வந்தார் அம்மா. அந்த கருவிகளை விற்குமாறு பலரும் அம்மாவிடம் கூறினார்கள். ஆனால் அவரோ இது எல்லாம் என் மகனுக்கு பயன்படும். அதனால் விற்க மாட்டேன் என்றார்.

9ம் வகுப்பில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு நான் இசையை வாழ்க்கையாக ஏற்க வைத்தார் என் அம்மா. என் கெரியர் இசை தான் என்பது அம்மாவின் நம்பிக்கை.

படங்களை போன்று நானும், அம்மாவும் இல்லை. நான் என் வாழ்க்கையில் அம்மாவை கட்டிப்பிடித்ததே இல்லை என்றார்.
Blogger இயக்குவது.