சர்வதேச பொலிஸாரால் இரத்மலானை கொலையாளி கைது!!


 கடந்த 2018ஆம் ஆண்டு இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் ஒருவர், சர்வதேச காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை- கல்கிஸ்ஸ நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான தனஞ்சய டீ சில்வாவின் தந்தையுமான, ரஞ்சன் டீ சில்வா வின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சர்வதேச காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் வைத்து கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், இந்த கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்தவரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ரஞ்சன் டீ சில்வா துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.