பணிப்பெணாக சென்ற விஜயகுமாரி மரணம்!


சவுதி அரேபியாவிற்கு சென்று உயிரிழந்த விஜயகுமாரியின் முகத்தைப் பார்ப்பதற்காக, அவரின் குடும்பம் கடந்த ஐந்து மாதங்களாகக் காத்திருக்கிறது.

அக்கரப்பத்தனை டொரிங்டனைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான தினேஷ்ராஜ் விஜயகுமாரி நிரந்தர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக சவுதி பணிப்பெண்ணாக 2016 ஆம் ஆண்டு சென்றுள்ளார்.

சவுதி சென்ற விஜயகுமாரி மூன்று மாதங்கள் மாத்திரமே தம்முடன் தொடர்பில் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறினர்.

இந்நிலையில் பணிப்பெண்ணாகச் சென்ற விஜயகுமாரி இறந்துவிட்டார் என்ற தகவல் கடந்த ஜூன் மாதம் குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது.

மனைவின் சடலத்தைக் கொண்டு வருவதற்காக கணவர் தினேஷ்ராஜ் எத்தனையோ அலுவலகங்களை நாடிய போதிலும் சடலம் இதுவரை நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.

இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 61,000 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய வங்கி கூறுகின்றது.

அவர்கள் தொடர்பில் தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களுக்கமைய, அதிர்ச்சியளிக்கும் பல்வேறு உண்மைகள் வௌியாகியுள்ளன.

கடந்த 6 வருடங்களில் பணிப்பெண்களாகச் சென்றவர்களில் 310-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வேலைவாய்ப்புப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் கடந்த 6 வருடங்களில் மாத்திரம் வெளிநாடுகளில் உயிரிழந்த 31 இலங்கைப் பணிப்பெண்களின் சடலங்கள் தாய் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.

இந்தக் காலப்பகுதியில் 281 பணிப்பெண்களின் சடலங்கள், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் அறிய முடிந்தது.

2016 ஆம் ஆண்டில் 70 சடலங்களும், 2017ஆம் ஆண்டில் 74 சடலங்களும் 2018 ஆம் ஆண்டில் 47 சடலங்களும் 2019ஆம் ஆண்டில் 63 சடலங்களும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 27 பேரின் சடலங்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.