தனஞ்சயவின் தந்தையை கொன்றவர் கைது!


 இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்ஜய டி சில்வாவின் தந்தை ரஞ்ஜன் டி சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான தர்மசிறி பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் வைத்து சர்வதேச பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

தெஹிவளை – கல்கிஸை மாநகர சபையின் நகர சபை உறுப்பினராக இருந்த வந்த ரஞ்ஜன் டி சில்வா, 2018ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

Blogger இயக்குவது.