ஐசிசியின் தசாப்தகால விருதுகளை வென்ற வீரர்கள்!


 தசாப்தத்தின் (2011-2020) சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) விருது வழங்கல் இன்று (28) இடம்பெற்றது.

இந்திய வீரர்களான விராட் கோஹ்லி, மஹேந்திர சிங் டோனி ஆகியோர் இதில் முக்கிய விருதுகளை வென்றுள்ளனர்.

இதன்படி,

தசாப்தத்தின் சிறந்த ஆண் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை – இந்தியாவின் விராட் கோஹ்லியும்,

தசாப்தத்தின் சிறநத பெண் வீரருக்கான ராச்சல் ஹெஹோ விருதை – அவுஸ்திரேலியவின் எல்லிசி பெர்ரியும்,

தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக – அவுஸ்திரேலியவின் ஸ்டீவ் ஸ்மித்தும்,

தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக – இந்தியாவின் விராட் கோஹ்லியும்,

தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக (பெண்) – அவுஸ்திரேலியவின் எல்லிசி பெர்ரியும்,

தசாப்தத்தின் சிறந்த ரி-20 கிரிக்கெட் வீரராக – ஆப்கானிஸ்தானின் ரஷிட் கானும்,

தசாப்தத்தின் சிறந்த ரி-20 கிரிக்கெட் வீரராக (பெண்) – அவுஸ்திரேலியவின் எல்லிசி பெர்ரியும்,

தசாப்தத்தின் சிறந்த இணைப்பாட்ட வீரராக – ஸ்கொட்லாந்தின் கைல் கோட்ஸரும்,

தசாப்தத்தின் சிறந்த இணைப்பாட்ட வீரராக (பெண்) – ஸ்கொட்லாந்தின் கத்தரின் ப்ரைஸ்சும்,

தசாப்தத்தின் ஸ்பிரிட் ஒப் த ஐசிசி விருதை – இந்தியாவின் எம்.எஸ். டோனியும்

வெற்றி கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.