சிறை மோதல்; பலியானாேர் எண்ணிக்கை உயர்வு!


 மஹர சிறைச்சாலை மோதலில் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் இன்று (01) அதிகாலை 3 மணி வரை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 111 கைதிகளும், இரு சிறை அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இந்த மோதலில் 8 கைதிகள் சிறையில் கொல்லப்பட்டதுடன், ஒருவர் இன்று வைத்தியசாலையில் பலியானார்.

நேற்று முன்தினம் (29) மாலை கைதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பிற்கு இடையில் ஆரம்பித்த மோதல் நேற்று காலை வரை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.