பி.சி.ஆர். சோதனையை நிராகரிக்கும் திஹாரிய பகுதியினர்!


 நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் வசிக்கும் மக்கள் பி.சி.ஆர். சோதனைகளைத் தவிர்த்து அவற்றை நிராகரிப்பதாக தெரிவித்த கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா, இது அட்டலுகாமா பகுதியின் நிலைமைக்கு ஒத்ததாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக இப்பகுதி தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும், இன்றைய தினம் அப்பகுதியின் பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடிய பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை நேற்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 94 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.