எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!
காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீற்றர் நீள சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.
காஷ்மீர் யூனியன் பிரதேசம் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டரில் சர்வதேச எல்லையை ஒட்டி எல்லை பாதுகாப்பு படையின் ரோந்து குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி சுரங்க பாதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்தவுடன் எல்லைப் பாதுகாப்புப் படை உயரதிகாரி ஜம்வால் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்தச் சுரங்கப்பாதை, சம்பா, கதுவா மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது சுரங்கப்பாதை என உயரதிகாரி ஜம்வால் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் போலவே தற்போது கண்டறியப்பட்ட பாதையும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக இது கட்டப்பட்டுள்ளதாகவும் பயன்படுத்தப்பட்ட மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் குறியீடு காணப்படும் நிலையில், இதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசு அமைப்புகளின் தொடர்பு இருப்பது தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை