ஊடகவியலாளரின் புதல்வி ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

 


12 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தனது தந்தையின் கொலையில் அரசாங்கத்திற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரின் புதல்வி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவலில் முறைப்பாடு செய்துள்ளார்

சென் பிரான்ஸிஸ்கோவில் அமைந்துள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க சார்பாக முறைப்பாடை தாக்கல் செய்துள்ளது.

இராணுவத்துடன் தொடர்புடைய குழுவினரால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி அலுவலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது  கொலை செய்யப்பட்டுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரத ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமாக இருந்த கோட்டாபய ராஜபக்ஸவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன்போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை உள்நாட்டு போரின் போது அரசாங்கத்தின் துஷ்பிரயோகம் மற்றும் தண்டனையின் வெளிப்பாடாக இது காணப்படுவதாக 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

யுத்த விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பான ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரைக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.இவர் கொலை செய்யப்பட்ட போது இலங்கை யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த காலம்.

முறைப்பாட்டை தான் பார்க்கவில்லை  என்றும் முக்கிய விடயங்களை கருத்திற்கொள்ளாமலும் அரசியல் தலைமைகளின் கருத்துக்களை அறியாமலும் எதனையும் தெரிவிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

சட்டவாக்க நிறுவனங்கள் சம்பவம் தொடர்பில் நம்பகத்தன்;மையான விசாரணையை நடத்த அல்லது ஈடுபாட்டுடன் விசாரணை செய்ய தவறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுயாதீனமான விசாரணை நடைபெறுவதற்கும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கும் விக்ரமதுங்க குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருவதற்கும் இழப்பீடு வழங்குவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணம் செய்ய வேண்டும் என முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.