கட்டாரில் உயிரிழக்கும் பணியாளர்கள்!

 


இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெரும்பாலானோர் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் கட்டாரில் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


இதில் பெரும்பாலானோர் அந்நாட்டில் மைதான கட்டமானத்திற்காக வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டார் இராச்சியத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

அதன்படி, கடந்த 10 வருடங்களில் கட்டாரில் 6,500 க்கும் அதிகமான வௌிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரதானமாக அதிக வேலைப்பளு காரணமாக கடந்த 10 வருடங்களில் வாரமொன்றுக்கு குறித்த 5 நாடுகளை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளுக்கு அமைய 2011-2020 காலப்பகுதியில் 5,927 வௌிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் 824 பாகிஸ்தான் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.