சஹ்ரான் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு!
நாட்டில் கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா மற்றும் 5 பேரை மார்ச் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியானகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஸ்கைப் தொழில்நுட்பம் வழியாக எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்துல் காதர் பாத்திமா சாதியா, அசாருதீன் முகமது இல்மி, அப்துல் ஹமீத் முகமது ரிஃபாஸ், முஹமது மஷ்னுக் முஹமது ரிலா, முஹமது அமீர் எம்.அயதுல்லா மற்றும் முஹமது முபாரக் முஹமது ரிபாயில் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை