மேல் மாகாண பாடசாலைகளில் என்டிஜன் பரிசோதனை

 


மேல் மாகாண பாடசாலைகளில் எழுமாற்றாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெரிவு செய்து உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது.


ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமானது.

ராகம லிசன்ஸ் மற்றும் மனுசத் தெரண இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

நாளொன்றுக்கு இரண்டு மூன்று பாடசாலைகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடசாலைகளிலும் சுமார் 30 மாணவர்களை உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் ஊடாக பாடசாலைகளில் எந்தளவிற்கு கொவிட் 19 வைரஸ் பரவியுள்ளது என எனக்கு அறிந்துக் கொள்ளமுடியும். பாடசாலைகளை திறப்பது மற்றும் ஏனைய அனைத்து விடயங்களுக்கும் இந்த தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

இங்கே பாராட்டத்தக்க அம்சம் என்னவென்றால், இது கொவிட் -19 உடன் மட்டுப்படுத்தப்படவில்லை. இது குழந்தைகளின் உடல்நிலை, சிறுநீரகம் மற்றும் எல்லாவற்றையும் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளதாக என அனைத்து செயற்பாடுகளையும் இதன்போது மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.