ஞானசாரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை?

 


பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த செய்திக் குறிப்பில், 2014 ஆம் ஆண்டு அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளிற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது.

மத மற்றும் இன ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான நடவடிக்கைகளில் ஈடுபட உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண்பதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு குற்றவியல் நடவடிக்கைகளிற்கு பரிந்துரைத்துள்ளது.

எனினும் இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.