கோப் குழு இலங்கை கிரிக்கெட் சபை மீது விசாரணை!!

 


கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கோப் குழுவில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான 2017 மற்றும் 2018 நிதியாண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் செயற்திறன் குறித்து மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.


அத்துடன், COPE குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இதற்கு முன்னரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நாளை பிற்பகல் 2 மணியளவில் கோப் குழு கூடவுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.