சத்தமில்லாமல் திருமணம் செய்த நாதஸ்வரம் சீரியல் நடிகை!!

 


சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு திடீரென திருமணம் நடந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.


சன் டிவியில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சுமார் ஐந்து வருடங்கள் மிகவும் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியலில் அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. திருமுருகன் இயக்கிய இந்த சீரியலை அடுத்து அவர் ’வாணி ராணி’ ’நிறம் மாறாத பூக்கள்’ ’ராஜா ராணி’ உள்ளிட்ட சீரியலிலும் நடித்து வந்தார் என்பதும் ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்தார் என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி நடிகை கீதாஞ்சலிக்கும் திருவாரூரைச் சேர்ந்த கிரிராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த இந்தத் திருமணத்தில் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. மாப்பிள்ளை கிரிராஜ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு துபாயில் வேலை பார்த்து வருவதால் விரைவில் கீதாஞ்சலியும் துபாய் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீதாஞ்சலி திருமணம் குறித்து சின்னத்திரை உலகிலகினர்களுக்கே பலருக்கு தெரியவில்லை என்பதால் சீக்ரெட்டாக நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.