பாகிஸ்தான் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் பிறப்பிடம்

 


பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் ஆல்வி, ஜனாதிபதி மாளிகை ஐவன்-இ-சதரில் இலங்கை பெளத்த பிக்குகளின் பிரதிநிதிகள் குழுவைச்சந்தித்து பேசும் போது ” இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளில் சிறந்த உறவுகளை பேணி வருவதால் பாகிஸ்தான்

இலங்கையுடனான தனது உறவை மிகவும் மதிக்கிறது என்றும் பாகிஸ்தான் இலங்கையை ஒரு சிறந்த பங்காளியாகவும் நண்பராகவும் கருதுவதாகவும், இரு நட்பு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்காக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.

தூதுக்குழுவை வரவேற்று உரையாற்றும் போது, பாகிஸ்தான் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் பிறப்பிடமாகவும் , புத்தரின் பெருமை வாய்ந்த மிக புனிதமான சில நினைவுச்சின்னங்களை தன்னகத்தே கொண்ட இடமாகவும் உள்ளது என்றும் எனவே இது இலங்கை – பாகிஸ்தானுக்கிடையே பெளத்த மத சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பாரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உலகின் வேறு எந்த நாட்டையும் விட மிக அதிகமான பெளத்த நினைவுச்சின்னங்கள் காணப்படுவதால் பாகிஸ்தானில் உள்ள பெளத்த மத இடங்களை பார்வையிட இலங்கை பெளத்த பிக்குகளையும், மக்களையும் ஊக்குவிக்குமாறு அவர் தூதுக்குழுவிடம் வேண்டிக்கொண்டார்.

இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் மத சுற்றுலாத்துறை ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சிறந்த வாய்ப்புக்களை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். இக்குழுவானது பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியத்தைப் இலங்கை மக்களுக்கு அறிவூட்டுவதோடு, பாகிஸ்தானுக்கு மத சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள ஊக்குவிப்பு அளிக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

பெளத்த தளங்களை பார்வையிட ஏற்பாடுகளை செய்த பாகிஸ்தான் அரசுக்கு தூதுக்குழு ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு பெளத்த பாரம்பரிய தளங்களை புதுப்பிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டியமை குறிப்பியத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.