என்ன சுபவீ ஐயர்வாள் நலமா ?


ஏன் ஐயர்வாள் என்று அழைத்தேன் தெரியுமா ? ஒற்றைக்கையால் திராவிட மணியை அடித்துக்கொண்டு , மறுகையால் கருணாநிதிக்குத் தீபம் காட்டியபடி பூசைசெய்பவர் ஐயர்வாளாகத்தானே இருக்கமுடியும். 


ஓ... நீங்கள் இறை எதிர்ப்பாளரல்லவா ? இறை என்பதற்கு வரி என்றோர் பொருளும் உண்டு. கருணாநிதியின் கட்சி வசூலித்த வரியெதையும் மறுத்ததாக வரலாறு உங்களிடம் இல்லையே. 3G ஒலிக்கற்றை ஊழல் தொடங்கி , இன்றுவரை ஊழல்செய்து, இட்லிக்கடைகளை உடைத்து, அழகுநிலையம் நடாத்திய பெண்ணை அடித்து உடைத்து வரிவசூலித்த கட்சியைச்சார்ந்த நீங்கள் இறைமறுப்பாளர் என்று சொல்லத் தகுதியற்றவர்.


அது கிடக்கட்டும்., Britanica Encyclopedia வில் திராவிடம் என்ற சொல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உங்களுக்கு, ஏன் திருக்குறளையோ, தொல்காப்பியத்தையோ சுட்டிக்காட்ட இயலவில்லை..? ஏனென்றால் "கடல்லயே திராவிடம் இல்லயாம்" என வள்ளுவரே காறி உமிழ்ந்திருப்பார். கட்டற்ற கலைக்களஞ்சியமான Britanica வின் தோற்றம் எப்போது, தொல்காப்பியம் மற்றும் திருக்குறளின் தொன்மை எவ்வாறானது என்பது கூடத் தெரியாத அளவிற்கு படுமுட்டாளாக உங்களை ஆக்கிவைத்த பெருமை கலைஞரையே சாரும்.


" பிரபாகரன் தனது துணைவியான மதிவதனியுடனேயே இவ்வளவு பேசியிருப்பாரா தெரியாது .." என்றெழுதியிருக்கிறீர்கள். அது மிகச்சரியானது. மனைவியுடனே கதையளந்துகொண்டிருக்க , தலைவர் பிரபாகரன் கலைஞர் கருணாநிதியிடம் திராவிடம்படித்தவரல்ல. அவர் போர்க்களத்தில் நின்ற வீரன், கருணாநிதிபோல போர்வைக்குள் கிடந்து வம்சத்தைப் பெருக்கி, அவர்களுக்கான சொத்துக்களையும் பெருக்கத் திட்டம் போட்டவரல்லர். 


தனது குடும்பத்தையே மண்மீட்புப் போரிற்குக் கொடையாகக் கொடுத்தவர். திகார் சிறைக்கு கனிமொழியை அனுப்பிவிட்டு கதறிய கருணாநிதியல்ல எங்கள் தலைவர். மகனையும் மகளையும் களத்திற்கு அனுப்பிவிட்டு, இறுமாப்புடன் நின்றவர்.


நாம்தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு மரியாதையாகப் பேசத் தெரியாது என்று எழுதியிருந்தீர்கள். ஸ்டாலினுடன் படம் எடுக்க வந்த முதியவரை கன்னத்திலறைந்து அனுப்புவதுதான் திராவிடத்தின் மரியாதையா ?


 செய்தியாளர் பாத்திமா பாபு வை மிரட்டிப் பணியவைத்து ஸ்டாலின் ஆடிய கூத்துகள் திராவிட மரியாதைக்குள் அடங்குமா ? Bullshit பிரபாகரன் என யாரோ ஓர் ஈழத்தமிழர் எங்கள் தேசியத்தலைவரைத் திட்டியதாகச் சொன்ன உங்கள் வளர்ப்பு பிரசன்னா தான் மரியாதையின் அடையாளமா ?

 சிங்கள இனப்படுகொலையாளியுடன் கைகோர்த்திருக்கும் ஜெகத்ரட்சகன்தான் உங்கள் மரியாதையின் அடையாளமா ? இனஅழிப்பு நடந்துமுடிந்த கையோடு டி.ஆர் பாலுவும் கனிமொழியும் திருமாவளவனும் ராஜபக்சவுடன் கைகுலுக்கியதுதான் திராவிடம் சொல்லும் மரியாதையா ? சரவணபவன் சாப்பாட்டுக்கடையை அண்ணாச்சியிடமிருந்து மிரட்டி வாங்கிய கலாநிதிமாறன்தான் திராவிடமரியாதையின் அடையாளமா ?

 சொல்லுங்கள் ஐயர்வாள்... எது உங்கள் மரியாதையின் அடையாளம்...?

சாதிச்சண்டைகளை உருவாக்கி, திராவிடம் என்ற பெயரில் பிளவுகளை உருவாக்கி, தமிழ்த்தேசியத்தைச் சீரழித்த உங்களையெல்லாம், இவ்வளவு மரியாதையுடன் நான் எழுதுவதன் பெயர்தான் தமிழ்த்தேசிய மரியாதை. திராவிடத்திற்கெல்லாம் இனி மரியாதையே கிடையாது. அதை எங்கும் எதிர்பார்த்து மூக்குடைந்து போகாதீர்கள்.


முடிந்தால் பனைவிதை நடுங்கள், ஏரிகளைத்தூர்வாருங்கள், கபசுர நீர் வழங்குங்கள், நாய்க்கும் நரிக்கும் மாட்டுக்கும் குரங்குக்கும் நீர்ச்சுனை அமையுங்கள்.


 இதில் எதுவும் முடியவில்லையா ? அமைதியாக ஓரிடத்தில் தூங்குங்கள், ஏனெனில் ஆழ்ந்ததூக்கம் மனிதனைச் சிந்திக்க வைக்கும்.,
இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். சீமான் அண்ணைக்கெதிராக ஈழத்தமிழர்கள் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. வெளியிட்டாலும் அது நமது உரிமை. இதற்குள் திராவிடத் "தலையாட்டி" களுக்கு வேலையில்லை.


(தலையாட்டி என்றால் பொருள்தேடி அலையாதீர்கள், தலையாட்டி என்றால், எதிரியுடன் சேர்ந்துநின்று தன்னினத்தவனைக் காட்டிக்கொடுப்பவன் என்று பொருள்)
- தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.