சியோன் தேவாலயத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட அமெரிக்கா உயர்ஸ்தானிகர்!


டந்த 2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று குண்டுவெடிப்புக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை இன்று அமெரிக்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இருந்து பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

அமெரிக்கா உயர்ஸ்தானிக அரசியல் உயர் அதிகாரி அன்டோனி எப். ரேன்சுலி யும் அவரது குழுவினரும் இன்று பிற்பகல் தேவாலயத்திற்கு வந்து தேவாலயத்தின் தற்போதைய நிலை பற்றி கேட்டறிந்தனர்.

சியோன் தேவாலய பிரதான போதகரின் மனைவி திருமதி ரொசான் மகேசன் அவர்கள் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு தேவாலயத்தின் தற்போதைய நிலைமை பற்றி எடுத்துரைத்தார்.

அமெரிக்க பிரதிநிதி சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் அதன் பின்னணியையும் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் பற்றியும் அவர்களது குடும்ப நிலை பற்றி கேட்டறிந்தகொண்டதுடன் ஆலயத்தில் கடந்த நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள் கட்டுமான பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பின்னனியையம் கேட்டறிந்ததுடன் தாக்கப்பட்ட ஏனைய தேவாலயங்களின் புனரமைப்புக்கள் முடிவடைந்த நிலையில்இதன் பணிகள் இடைநடுவில் நிற்பதையொட்டி தனது கவலையை தெரிவித்ததோடு இனி வரும் காலங்களில் தம்மாலான முழு உதவியினையும் வழங்கவுள்ளதாகவும் சியோன் தேவாலய பிரதான போதகரின் மனைவி திருமதி ரொசான் மகேசனிடம் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.