வவுனியாவில் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!


வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா- கற்பகபுரத்திலுள்ள இரு குடும்பங்களை சேர்ந்த  ஒன்பது பேருக்கும் யாழில் இருந்து வருகைதந்த இரண்டு பேருக்கும் சிறைச்சாலையில் ஒருவருக்கும்  இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக திருகோணமலையில் இருந்து வவுனியா- கற்பகபுத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு  வந்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவருடன் பயணம் மேற்கொண்ட மற்றும் தொடர்பினை பேணிய சிலரிடம் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவுகள் இன்று  கிடைக்கப்பெற்றதுடன், அதில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்  வவுனியா சிறைச்சாலையில் ஒருவர்,  யாழில் இருந்து வருகைதந்த 2 பேர் உள்ளடங்களாக 12 பேர் புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.