ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நஃபர் மௌலவி அடையாளம்!


ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை தகவல்களின்படி, லுக்மான் தாலிப், லுக்மான் தாலிப் அகமட்  என்ற தீவிரவாதிகள் 2016 முதல் தாக்குதல்கள் நடக்கும் வரை பல சந்தர்ப்பங்களில் சஹ்ரானை சந்தித்ததாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் லுக்மான் தலிப் அகமட் இலங்கையில் பிரசாரங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சாரா ஜஸ்மின் என்பவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.